பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


தன் துணை மான் இறந்து விட்டது; அதன் மருப்பு

ஏற்கெனவே அறுந்து விட்டது. உயிர் தப்பி ஒட எங்கோ சிக்கி

அதன் கொம்பு உடைபட்டு விட்டது.

ஆண் திக்கு இல்லை; இனி என்ன செய்வது? ஒடிப் பிழைக்கச் செல்கிறது.

ஆட்களே நடமாடாத அரிய வழி என்று கூறுகிறார்.

“ அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச் சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் ஆளில் அத்தம் ஆகிய காடே 18-22/23

பாழ்பட்ட பறந்தலை

பாழ்பட்ட இடம்; அங்குக் கோயில் சிலைகள் தூண்களில் இருந்து சாய்ந்து கீழே விழுந்து படிந்து கிடக்கின்றன. வழிபாடு இல்லாத அழிபாடு உடைய மன்றம் அது.

அங்கு நரை மூதாளர்கள் வந்து குழுமுகின்றனர். பொழுது போக்குக்காகச் சூது ஆடுகிறார்கள். கவறு உருட்டுகிறார்கள். அதனால் தரையில் குழிகள் அமைகின்றன.

அந்தக் குழிகளில் காட்டுக் கோழிகள் வந்து முட்டை இட்டு நிரப்புகின்றன என்கிறார். அப்படி முட்டை இடப் பகைவர் நாடு காடாகி அழிகிறது என்கிறார்.

முதியவர்கள் நரை கண்டவர்கள் சூது ஆடும் வட்டுக்கள் அவை பட்டுக் குழிகள் ஏற்பட்டு விட்டன. அந்தக் குழிகளில் வந்து காட்டுக் கோழிகள் முட்டை இடுகின்றனவாம். ஏதோ எங்கோ கண்ட காட்சி அதை மறக்காமல் கொண்டு வந்து வைக்கிறார். இங்கு இந்த வருணனையை எண்ணுந்தோறும் வியப்பை அளிக்கிறது.

“ பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,

நரைமூ தாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் கான வாரணம் ஈனும் காடாகி விளியும் நாடுடையோரே’ 13- 17/52