பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

11



இதோ அந்த வரிகள்;

“ஊர் இல்ல; உயவு: அரிய, நீர் இல்ல; நீள் இடைய, பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கின் செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை” -17-23/3

ஆளில் அத்தம்

புலவர் வரும் வழி பருந்து இருந்து வருந்தும் அரிய வழி என்றார் ஒரு கவிஞர். அதேபோல மற்றொரு காட்சியைத் தருகிறார் மற்றொரு கவிஞர்.

புலவர் வரும் வழி ஆட்கள் நடமாட்டமே இல்லாத வழியாம். அங்கே அவர் காண்பது யாது?

‘அறு மறுப்பு எழிற்கலை என்கிறார். ஆண்மான் அதன் கொம்பு முறிந்து விட்டது; அழகிய கலைமான் அது; அது புலியின் பால் பட்டு விட்டது; புலி அடித்துக் கொன்று விட்டது.

அதன் துணை மான் உடனே என்ன செய்கிறது? தன் குட்டி மானை இழுத்துக் கொண்டு ஓடிவிட முயல்கிறது.

‘சிறு மறி தழிஇய தெறி நடை மடப்பிணை'’

தெறித்த நடையுடையது பெண்மான் என்கிறார். உயிர் தப்புவதற்காக அது உயர எழுந்து தெறித்து ஒடுகிறது; அழகான சொற்சித்திரம்.

அது பூளைச் செடிகள் மிக்க கடுமையான வெற்றிடம்; அங்கே வேளையின் வெண் பூவைக் கறிக்கிறது என்கிறார். கடிக்கிறது என்று கூறவில்லை. அது கறித்துத் தின்கிறது என்கிறார். புல்மேய்ந்த பெண்மான் வேளை வெண்பூவைக் கறிக்கிறது என்கிறார். பூளைச் செடி மிக்க பாழ் இடம் அது என்கிறார். வற்றிய கட்டாந்தரை அது. புல்லே கிடைக்காமல் வேளைப் பூவைக் கறிக்கிறது என்கிறார்.