பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



“ ஊரில்ல; உயவு அரிய, நீர் இல்ல; நீள் இடைய’ நீண்ட தூரத்தில் வழிப்பறிக் கொள்ளையர், வழி மேல் விழி வைத்துப் பார்த்து இருக்கின்றனராம். அவர்கள் பதுங்கி இருந்து பார்ப்பதற்கே தனி இடம் அமைத்துக் கொண்டு உள்ளனராம். ‘பார்வல் இருக்கை'; அவர்கள் எப்படிப் பார்க்கின்றனர்? கவி கண் நோக்கு என்கிறார். கண்ணைக் கவித்துப் பார்க்கின்றனர். மேலே கையை அமர்த்திச் சூரிய வெளிச்சம் கண்ணில் படாது இருக்கவும், பார்வையை ஒருமுகப்படுத்தவும் அவர்கள் பார்க்கின்ற பார்வை இது. ‘கவி கண் நோக்கு என்கிறார்.

பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கின் செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

என்று குறிப்பிடுகின்றார்.

அம்பு குறிபார்த்து விடுவதில் தேர்ச்சி பெற்றவர் என்பார். செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் என்கிறார்.

அவர்கள் அம்பு பட்டுத் தரையில் விழுகிறார்கள். அவர்கள் பொருள்களைக் கவர்ந்து கொண்டு செத்தவர்களைத் தூக்கி எறிந்து விடுகிறார்களாம். அவர்கள் பிணங்கள் கற்குவியல்களில் தூக்கி எறியப்படுகின்றன. அவை புதிது புதிதாகக் கிடக்கின்றன என்பார். ‘வம்பப் பதுக்கை என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் பிணங்களை நம்பி நிணம் கவரும் பருந்துகள் காத்துக் கிடக்கின்றன. அங்கே பிணம் விழவில்லை; எப்பொழுது விழுமோ என்று காத்துக் கிடக்கின்றன. அதனால் அவை சிறகுகள் குவித்து உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன என்பார். திருந்து சிறை வளைவாய்ப் பருந்து’ என்கிறார். குத்தித் தின்னப் பயன்படுவது வளைந்தவாய்'என்பதைக் குறிப்பிடுகின்றார்.

அப் பருந்துகள் உன்ன மரத்துக் கிளையில் அமர்ந்திருக் கின்றனவாம். அத்தகைய கவர்த்த வழிகளில் புலவர்கள் வருகிறார்கள் என்கிறார்.

வழியின் கடுமை இதைவிட வேறு எப்படிச் சித்திரிக்க முடியும் வருணைனைச் சிறப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.