பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

9



இப் பாடல்கள் கவிதை நலன்கள் மிக்குப் பெற்றுள்ளன. சொல்லோவியங்கள் பெற்றிருப்பது இவற்றின் தனிச்சிறப்பு; மற்றும் அணி நலன்களுள் உவமைகள் தனிச் சிறப்புக்

கொண்டவை; அவை கவிதைக்கு அழகு தருகின்றன.

வாழ்க்கைச் சித்திரங்கள், நிகழ்ச்சிகளை அறிவித்தல், சிந்தனை வெளிப்பாடுகள் இவற்றிற்குச் சிறப்புத் தருகின்றன.

வருணனைச் சிறப்புகள்

காட்டுவழி

பாலை வழியை அகப்பாடல்கள் சித்திரிக்கின்றன; கடுவழி, அதனைக் கூறுவன பாலைத் திணைப்பாடல்கள் என்பர்; அவையே அகப் பாடல்களுள் மிகுதி என்பது அறிந்த ஒன்று. புறப்பாடல்களிலும் இப்பாலை வருணனைகள் ஒரு சில இடம் பெற்றுள்ளன.

புலவர்கள் வரும் வழிகள், அவற்றின் அழிவுகள் அழகிய சித்திரங்களாகத் தீட்டப்படுகின்றன; அவற்றுள் ஒன்று இது.

‘அரசனே! புலவர்கள் தம் வறுமையைத் தீர்ப்பாய் நீ என்பதை அறிந்து அவர்கள் இவ் அரிய வழிகளைக் கடந்து வருகிறார்கள்’ என்கிறார் புலவர்.

“ உன்ன மரத்த துன்னருங் கவலை

நின்னசை வேட்கையின் இரவலர் வருவர்”

“அவரது இன்மை தீர்க்க” என்று கூறுகிறார் கவிஞர்.

அவர்கள் வரும் வழி அவர்கள் உயிர் தப்பி வருவது அருமை என்கிறார்.

அவர்கள் வரும் வழி எத்தகையது? சிறு சிறு சொற்கள்; “ஊர் இல்ல வழியில் ஊர்களே இல்லையாம். நடப்பது அரிது; களைப்புத் தருவது என்பார் ‘உயவு’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுவார். மற்றும் கல்லும் முள்ளும் மிக்க வழி என்பார். ‘அரிய’ என்கிறார். குடிக்கவாவது நீர் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை; நீண்டவழி அது என்கிறார். நீர் இல்ல; நீள் இடைய” சேர்த்துப் பார்ப்போம்.