பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



காவற் காடுகளையும் அருவிகளையும் உடைய நாடு உன் நாடு; முள்ளுர் பெண்ணை நதிபாயும் சோலைகள் உடையது; அது உன் ஊர் ஆகும்.

நீ பெற்ற பெருவெற்றியை யாம் பாட வந்தோம். எனினும் அறிவிற் சிறந்த அந்தணன் கபிலன் பாடிவிட்டான். எங்களுக்குப் பாட இடமே வைக்கவில்லை. முழுதும் அவன் சிறப்பித்துக் கூறிவிட்டான்.

சேர அரசர்கள் கடலில் கலம் செலுத்திய பிறகு யார் அவ் வாறு செய்ய முடியும்? கலம் செலுத்த அஞ்ச வேண்டியதுதான்.

அதைப் போன்ற நிலைதான் எங்களுடையது. கபிலன் பாடி முடித்த பிறகு நாங்கள் பாடுவதற்கு இடம் இல்லை; பாடினும் எடுபடாது.

பகை வேந்தர்கள் படுகளத்து ஒழிய அவர்கள் யானைகளோடு தாக்கி அழித்தாய்! இன்மை எங்களைத் துண்டுகிறது; உன் புகழ் மிக்கு உள்ளது; வண்மை மிக்கவன் நீ அதனால் உன்னைப் பாட வந்துள்ளோம்.

ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை யுரவோன் மருக வல்லே மல்லே மாயினும் வல்லே நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல் துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற் பறையிசை யருவி முள்ளுர்ப் பொருந தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த ணாளன் இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு சினம் மிகு தானை வானவன் குட கடல், பொலம் தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப் பிற கலம் செல்கலாது அனையேம், அத்தை இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் வண்மையின் தொடுத்தனம், யாமே-முள் எயிற்று