பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



128. வேள் ஆய் அண்டிரன்

ஊர்ப் பொது இடத்தில் பலாமரத்துக் கிளைகளில் இசைக் கலைஞர்கள் தம் முழவினைக் கட்டி வைத்துச் செல்கின்றனர்.

அந்த முழவினைப் பலாப்பழம் என்று பெண் குரங்கு நினைக்கிறது. அதனைத் தட்டிப் பார்க்கிறது. அதில் எழுகின்ற முழவோசை அருகில் கீழே இருந்த அன்னச் சேவல்களை ஆட வைக்கிறது. அத்தகைய சிறப்புடைய பொதிகை மலைக்கு உரியவன் ஆய் அண்டிரன்.

அவன் நாட்டில் ஆடு மகள் செல்லக் கூடுமே யன்றிப் பீடு உடைய மன்னர்கள் புக இயலாது.

மன்றப் பலவின் மாச் சினை மந்தி இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின். அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்ஆடுமகள் குறுகின் அல்லது, பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே திணை - அது துறை - வாழ்த்து இயன்மொழியும் ஆம். அவனை அவர் பாடியது.

129. வேள் ஆய் அண்டிரன்

ஆய் அண்டிரன் அவன் மாமலையில் வாழும் குறவர் சிறுகுடிசைகளில் வாழ்பவர்; மூங்கில் குழாயில் வைத்திருக்கும் முதிர்ந்த கள்ளை மகிழ்வுடன் பருகுவர் வேங்கை முற்றங்களில் குரவை ஆடுவர். தீஞ்சுளைப் பலா மிக்குள்ள மலை அது.

அவன் இரவலர்க்குத் தந்த யானைகள் அவற்றை எண்ணிக் கூற முடியாது. வானத்து நட்சத்திரங்கள் அவை எங்கும் நிறைந்து கருமையே இல்லாதபடி நிரம்பி விட்டால் வானம் வெளுப்பாகவே காட்சி அளிக்கும்.

அம்மீன்களின் கூட்டம் அவற்றைப் போன்றது அவன் தந்த யானைகளின் ஈட்டம்.