பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அதே யானை ம்தம் கொண்டுவிட்டால் யாரும் நெருங்க முடியாது; இன்னாதது ஆகிறது.

இவை அவனால் புரக்கப்படும் புலவர்களுக்கும் அவன் காட்டும் ஆதரவுக்கும், பகைவர்கள் அவனால் தாக்கப் படுவதற்கும் உவமைகள் ஆகின்றன. யானையின் இருவேறு நிலைகள் அவன் தனிவேறு செயல்களுக்கு உவமப்படுத்தப் படுகின்றன.

“ ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை, பெரும, எமக்கே மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய், பெரும, நின் ஒன்னா தோர்க்கே! - 94

அவல உணர்வு

பாரி மகளிர் தம் தந்தையோடு இருந்த மகிழ்வும், அவர் இறந்தபின் அடைந்த தாழ்வும் அழகிய சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. அவலத்தின் எல்லையை இது தொடுகிறது. முரண்பட்ட நிலையைச் சித்திரிக்கின்றது.

“ அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்நிலவில் வென்று எறிமுரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!” - 112 மகிழ்வும் இழப்பும் சித்திரிக்கப்படுகின்றன; முரண்பட்ட காட்சிகள் முன் நிறுத்தப்படுகின்றன.

அங்கதத்துக்கு ஒரு செய்யுள்

அங்கதம் பிறரைத் திருத்துவதற்குப் பயன்படுவது. அவ்வையார் தொண்டமானைப் புகழ்வது போலக் கூறி அதியனின் படைப் பெருமையை உணர்த்துகிறார்.

இவன் போர்க் கருவிகள் கொலுப் பொம்மைகள்; அவன் கருவிகள் கொல்லன் உலைக் களம் சென்றுள்ளன. இவற்றைக் கூறும்போது அங்கதம் அதில் அமைந்து அவனைத் திருத்துகிறது.