பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ரா.சீ. 17

“ இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடைவியன் நக ரவ்வே, அவ்வே, பகைவர்க் குத்திக், கோடு நுதி சிதைந்து. கொல்துறைக் குற்றில மாதோ, என்றும் உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல்எம் கோமான், வைந்நுதி வேலே 95

இளமை நினைவுகள்

முதியவர் அவர் நினைத்துப் பார்க்கிறார். கழிந்துவிட்ட இளமை; அது தன்னைவிட்டு ஒழிந்துவிட்டது.

விழுத்தண்டு ஊன்றி இருமல் இடையே சில சொற்கள் பேசும் நிலை; அதில் எழுகின்றது பழைய அலை.

மணல் பாவைக்குப் பூப்புனைந்து பின் நீராடச் செல்லும் சிறுமியர் அவர்களோடு ஆடிப்பாடிப் பின் அவர்கள் வியக்கும்படி குளத்தில் பாய்ந்து மணல் கொண்ட அந்தப் பழைய கல்லா இளமை அது எங்கே சென்றது என்று நினைத்துப் பார்க்கின்றார். அவர் பெயரே தொடித்தலை விழுத்தண்டினார் என்பது ஆகும்.

அருமையான வாழ்க்கை நினைவுச் சித்திரம்; மறக்கமுடியாத விசித்திரம்; இலக்கியத்தில் அது பெற்றுவிட்டது நிரந்தரம்.

“ இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து, தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி, மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு, உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து, நீர்நனிப் படிகோடு ஏறிச், சீர்மிகக், கரையவர் மருளத் திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ"தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,