பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே?” – 243

மக்கட்பேறு

மக்கள்பேறு அதன் சிறப்பைப் பாண்டியன் அறிவுடைநம்பி அழகாகச் சித்திரிக்கிறார். ஒரே கவிதைதான். அதுவே அவரைக் கவிஞன் என்ற சிறப்புக்குத் தள்ளி இருக்கிறது. குழந்தையின் துறுதுறுப்பு: சிறு கை அளாவி உணவு உண்பது; அது மெய்பட விதிர்ப்பது; அதனால் உண்டாகும் இன்பம் அவற்றைச் சித்திரிக்கிறார்.

“ படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே” 188

வள்ளுவர் குறளுக்கு இது விளக்கமாக அமைந்துள்ளது.

“ அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்” – 64.

மகளிர் மறம்

‘மூதில் மகளிர் என்று இவர்கள் போற்றப்படுகின்றனர். பண்டைத் தமிழரின் மறம், அழியாத சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

ஒருத்தி, “உன் மகன் எங்கே இருப்பான்?’ என்று வாய் தவறிக் கேட்டு விட்டாள். அதற்கு மற்றவள் தரும் விடை இது:

‘ஈன்ற வயிறு இது; அவன் தோன்றும் இடம் போர்க்களம்’ என்று கூறுகிறாள். புலி தங்கிய குகை தன் வயிறு என்று கூறுவது ஒரு தாயின் மறத்தைச் சித்திரிக்கின்றது. உருவகம் இதற்கு.அழகு தருகிறது.

“சிற்றில் நற்றுண் பற்றி, நின்மகன்

யாண்டுளனோ? என வினவுதி என்மகன்