பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



உமக்குத் தருதற்கு எம்மிடம் மதிப்பு மிக்க பொன் ஆபரணம் ஏதும் இல்லை. காட்டில் வாழ்பவர் யாம் என்று கூறித் தான் தன் மார்பில் பூண்டிருந்த ஒளிமிக்க பொன் மாலையையும் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றித் தந்தான்.

ஐயா! உம் நாடு எது? என்று கேட்டால் அவன்தன் நாட்டைப் பற்றி யாதும் கூறிற்றிலன். ஊர் அதுவும் உரைத்திலன். அவன் யார் எந்த நாட்டினன்? எந்த ஊர் அவற்றின் பெயர் எதையும் கூறவில்லை.

பிறர் அங்கங்கே உரையாட அதைக் கொண்டு அறிந்தேன். அவன் தோட்டி என்னும் பெயரை உடைய மலைநாட்டுக்கு உரியவன் என்பதையும், பளிங்குபோல் நீர் பாயும் அருவிகளை உடைய குன்றுகளை உடையது அவன் நாடு என்பதையும், அதற்குத் தலைவன் நள்ளி என்பான் அவன் என்பதையும் அறிய முடிந்தது.

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தித், தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழற் கால், வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னிச், செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, கான் அதர் மயங்கிய இளையர் வல்லே தாம் வந்து எய்தா அளவை, ஒய்யெனத் தான் ஞெலி தீயின் விரைவணன் சுட்டு, நின் இரும் பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின், அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, நல் மரன் நளிய நறுந் தண் சாரல், கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம் என, மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;