பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

169



வரவு எமர் மறந்தனர் - அது நீ புரவுக் கடன் பூண்ட வண்மையானே.

திணை - அது துறை - இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

150. கண்டீரக் கோப்பெருநள்ளி

கூதிர் காலத்தில் பருந்தின் சிறகு போல என் கிழிந்த ஆடை இருந்தது. பழையது; ஒட்டுப் போட்டு அழுக்குப் படிந்திருந்தது. இத்தோற்றம் அவனை நெகிழ வைத்திருக்கிறது.

பலாமரத்து அடியில் யான் இளைப்பாறினேன். என்னைப் பற்றிய நினைவு என்னைவிட்டு அகன்றுவிட்டது.

என்னைப் பார்த்தாலே யான் வேற்று நாடுகள் பல சுற்றி வந்து களைத்து இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. என் உளைச்சலும் வருத்தமும் அவனுக்கு நன்கு தெரிய வந்தன.

அவன் தலைமுடியில் ஒளிபெற்ற ஆபரணம் அணிந்திருந்தான். செல்வன் என்பதை அது காட்டியது. கையில் வில்லை வைத்திருந்தான். அவன் வேட்டுவனாகத்தான் இருக்க வேண்டும்.

அவன் என்னைத்தொழுது இன்னுரை தந்தான். நான் உடனே அவனுக்கு மதிப்புத்தரும் பொருட்டு எழுந்து நின்றேன்.

கை அமர்த்தி என்னை இருக்க என்று கூறினான். அவனோடு உடன் வந்த இளைஞர் எங்கோ வழிமயங்கிச் சென்று இருந்தனர். ‘அவர்கள் திரும்பி வருவதற்குள் கொழுவிய இறைச்சியை நெருப்பில் இட்டுச் சுட்டு நின் சுற்றத்தவரோடு தின்பீர்’ என்று கூறித் தந்தான்.

அமிழ்தத்தை ஒத்த அதனைத் தின்று எங்களை வாட்டிய பசியைப் போக்கிக் கொண்டோம்.

அருகில் இருந்த மரங்கள் மிக்க மலைச்சாரலில் கற்கள் இடை இருந்த அருவி நீரைத் தண்ணெனப் பருகிப் பின் அவனிடம் விடைபெறத் தொடங்கினேன்.