பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



சேர்க்கிறாய்; அவற்றை எமக்கு நல்கு கிறாய்; அவற்றைப் பெறும் நாங்கள் மனநிறைவு கொள்கிறோம்.

பெருமையற்ற மன்னர்களைப் புகழ்ந்து பேசுவதும், அவர்கள் சாதிக்காத வெற்றிகளைச் சாதித்தனவாகப் புனைந்து கூறிக் கிளப்பதும் எம் சிறு செந்நாவால் இயலா. உன்னைப் பாடுவதில் தான் யாம் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, நாள்தோறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்பப்; பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச், செய்யா கூறிக் கிளத்தல் எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே.

திணை - பாடாண் திணை, துறை - பரிசில் துறை.

கண்டீரக்கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

149. கண்டீரக் கோப்பெரு நள்ளி

வாழ்க நீ நள்ளி! நீ எமக்கு நல்கிய வளம் அது எங்களைக் கெடுத்துவிட்டது; மயக்கம் கொள்ளச் செய்துவிட்டது. தலை கால் தெரியாமல் திகைக்க வைத்துவிட்டது.

நாங்கள் எங்கு இருக்கிறோம். என்ன செய்கிறோம் என்பதுகூட எங்களுக்குத் தெரிவது இல்லை.

காலையில் மருதம் பாட வேண்டும். மாலையில் செவ்வழிப் பண்பாட வேண்டும். இதுதான் நியதி. யாழிசை எம்மிடம் தடுமாறுகிறது.

எம் உறவினராகிய பாணர்கள் நிலைதடுமாறி வாழ்கின்றனர். அதற்குக் காரணம் நீ தந்த பெருஞ்செல்வம், நீங்காத செல்வம். அது நிறைந்துவிட்டது.

நள்ளி! வாழியோ, நள்ளி! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக், காலைக்

கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,