பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

167



147. வையாவிக் கோப்பெரும் பேகன்

கல்முழைகளில் இருந்து விழும் அருவிகளை உடைய மலைகள் பலவற்றைக் கடந்து சிறிய யாழ் கொண்டு செவ்வழிப்பண் கூட்டிப் பாடினோம்.

அங்கே கார் காலத்து மழைத் துளி ஓசை கேட்டுத் தனிமையில் வருந்திக் கொண்டு இருந்தாள் ஒரு மங்கை; இது நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி, அவள் ஒரு மூலையில் ஒடுங்கித் தனிமையில் வருந்தியவளாய் இருந்தாள்.

வாரி முடிக்காத அவள் கூந்தல் நீலமணிபோல் விளங்க மாசறக் கழுவிப் புதுமலர் சூடி அவள் கவின் பெற நீ அங்குச் சென்றால் அதுவே யாம் வேண்டும் பரிசில். ஆவியர் தலைவனே! இதுவே யாம் வேண்டுவது.

கல் முழை அருவிப் பல் மலை நீந்திச், சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக், கார் வான் இன் உறை தமியள் கேளா, நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப், புது மலர் களுல, இன்று பெயரின், அதுமன், எம் பரிசில் - ஆவியர் கோவுே!

திணையும் துறையும் அவை, அவள் காரணமாக அவனைப் பெருங்குன்னுர் கிழார் பாடியது.

148. கண்டீரக் கோப் பெரு நள்ளி

அருவிகள் ஒலிக்கும் மலைக்குத் தலைவனே! நள்ளி!

விடா முயற்சியால் நீ கொணரும் செல்வத்தை வாழ்த்தி யாம் பரிசில் பெறுகிறோம்.

ஒவ்வொரு நாளும் பொன் ஆபரணங்களையும், களிறு களையும் கொண்டு வந்து நெற்கூடுகள் மிக்குள்ள நின் நகரில்