பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, ‘அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்! என, இஃது யாம் இரந்த பரிசில் : அஃது இருளின், இன மணி நெடுந் தேர் ஏறி, இன்னாது உறைவி அரும் படர் களைமே!

திணையும் துறையும் அவை.

அவனை அவள் காரணமாக அவர் பாடியது.

146. வையாவிக் கோப்பெரும் பேகன்

பேகனே யான் எம் வறுமை தீர்க்க என்று கேட்க

வரவில்லை. பொன் ஆபரணம் தருக என்றும் இரக்க வரவில்லை.

யாழிசைத்துச் செவ்வழிப் பண்பாடி உன்சீர்மிகு நாட்டைப்

பாடினோம். இவ் இசை கேட்டு நீ இன்புற்றுப் பரிசில் தர விழையலாம். யாம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.

உன்னை எதிர் நோக்கும் ஏந்திழையாள் உன்னைப் பிரிந்து

வாடுகிறாள். அவள் துயர் தீர நீ உன் தேரினை அங்குச் செலுத்துக.

வாடிய அவள் வாழ்வு மலரட்டும்; மயில் தோகை குவிந்தது

போல விளங்கும் அவள் கூந்தலில் அவள் பூச் சூடிக் கொள்ளட்டும். அவள் மகிழ்வு பெற நீ அருளுக; இதுவேயாம் வேண்டுவது; எமக்குத் தரும் பரிசிலும் ஆகும்.

அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல நல் நாடு பாட என்னை நயந்து பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ நல்காமையின் நைவரச் சாஅய், அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, ஒலி மென் கூந்தற் கமழ் புகை கொளிஇத், தண் கமழ் கோதை புனைய,

வண் வரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே!

திணையும் துறையும் அவை.

அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.