பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

165



அருளாய் ஆகலோ கொடிதே இருள் வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் கார் எதிர் கானம் பாடினேமாக, நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் கலுழ்ந்து, வார் அரிப் பணி பூண் அகம் நணைப்ப, இணைதல் ஆனாளாக, ‘இளையோய்! கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு? என, யாம் தற் தொழுதனம் வினவக் காந்தள் முகை புரை விரலின் கண்ணி துடையா, ‘யாம் அவன் கிளைஞரேம்.அல்லேம் கேள், இனி எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், வரூஉம் என்ப - வயங்கு புகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு, முல்லை வேலி, நல் ஊரானே.”

திணையும் துறையும் அவை.

அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.

145. வையாவிக் கோப்பெரும் பேகன்

மென்மை மிக்கது மயில்; அது குளிரால் நடுங்குகிறது என்று அதற்கு மேல் ஆடையைத் தந்தாய் அழியாப் புகழ் கொண்டாய். யானைகள் மிக்கு உள்ள பேகனே! யாம் பசித்து அதனால் உன்னை நாடி வரவில்லை. எங்களை எதிர் பார்த்துச் சுற்றத்தவரும் இல்லை.

களங்கனியன்ன கருங்கோட்டுச் சிறிய யாழை இசைத்துக் கேட்பாரை மகிழ்விக்கிறோம். நாங்கள் வேண்டும் பரிசில் காசு பொருள் அன்று: அறம் செய்து உதவுக அருளுக என்பதுதான் யாம் உன்னிடம் எதிர் பார்க்கும் பரிசில்.

இன்று இரவுப் பொழுது, நெடுந்தேர் ஏறித் தனிமையில் வருந்தி உறையும் ஒருத்தியின் துன்பத்தைக் களைவாயாக! இதுவே யாம் உன்னிடம் கேட்கும் பரிசில்.

“மடத் தகை மா மயில் பனிக்கும் என்று அருளிப், படாஅம் ஈத்த கெடாஅ நல் இசைக், கடாஅ யானைக் கலி மான் பேக! பசித்தும் வாரேம் பாரமும் இலமே!