பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் கை வள் ஈகைக் கடு மான் பேக! யார்கொல் அளியள்தானே - நெருநல், சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக், குணில் பாய் முரசின் இரங்கும் அருவி நளி இருஞ் சிலம்பின் சீறுர் ஆங்கண், வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, நின்னும் நின் மலையும் பாட, இன்னாது இகுத்த கண்ணி நிறுத்தல் செல்லாள், முலையகம் நனைப்ப, விம்மிக், குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே?

திணை - பெருந்திணை, துறை - குறுங்கலி, தாபதநிலையும் ஆம்

அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.

144. வையாவிக் கோப்பெரும் பேகன்

இதோ இதைக் கேட்பாயாக இருள் வரும் அந்திப்பொழுது எம் சிறிய யாழில் செவ்வழிப்பண் இசைத்து உன்னுடைய காட்டைச் சிறப்பித்துப் பாடினோம். கார் காலத்தைச் சித்திரித்தோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

பாட்டைக் கேட்டு நெகிழ்ந்தவளாய் நங்கை ஒருத்தி கண்ணிர் விட்டாள். இது எங்களுக்கு வியப்பு அளித்தது. இவள் ஏன் வருந்த வேண்டும்? அவளை வினவத் தொடங்கினோம்.

‘இளநங்கையே யாம் நேசிக்கும் தலைவனுக்கு நீ உறவோ?’ என்று யாம் பணிவுடன் கேட்டோம்.

காந்தள் முகை போன்ற அவள் மெல்லிய விரலால் தன் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு ‘யாம் இப்பொழுது அவனுக்குக் கிளைஞர் அல்லேம்; கேட்பீர். அவர் இனி எம்மைப் போல் ஒருத்தியை விரும்பி ஒலி செய்யும் தேரில் ஊர்க்கண் வருகிறார்; புகழ் விளங்கு பேகன் ‘ என்று கூறினாள்.

அவள் யார்? ஏன் அழுகிறாள்? அவள் குறை யாது? அவள் உன் பெயரைக் கூறுகிறாள். அவளுக்கு அருள் செய்யவில்லை என்றால் அது கொடிது ஆகும்.