பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

163



கொடை மடம் படுபவன் படைமடம் படுவது இல்லை. போர்க்களத்தில் அவன் ஆராய்ந்தே செயல்படுவான். தாக்குவது யாரை எப்பொழுது? எங்கே? என்று அறிந்தே செயல்படுவான். அறிவு அற்று அழிவைத் தேடமாட்டான்.

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரிபோலக், கடாஅ யானைக் கழற் காற் பேகன் கொடைமடம் படுதல் அல்லது, படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.

திணை - அது துறை இயன்மொழி.

அவனை அவர் பாடியது.

143. வையாவிக் கோப்பெரும் பேகன்

மழை வேண்டிப் பலி இட்டு வழிபாடு செய்து மழை காணும் குறமகளிர், மிக்கு பெய்தால் ‘மேகமே அகலுக’ என்பர். அவை நீங்க அவர்கள் உவகை கொள்வர். தினை உண்டு வாழும் வாழ்க்கையர்; அவர்கள் வாழும் மலை நாடனே; போரில் வெற்றியும் ஈகைச் சிறப்பும் உடைய பேகனே!

கடும்வழி கடந்து பசிக்கு வருந்தும் எம் சுற்றத்தினர் அவர்களுக்காகப் பரிசில் கேட்க உன் மலை நாட்டில் சிற்றுார் நோக்கி உன் வீட்டு வாயிலை அடைந்தோம்; உன் மலையையும் உன் சிறப்பையும் பாட அதைக் கேட்டு ஒரு நங்கை கண்ணிர் விட்டாள்; அது அவள் மார்பகத்தை நனைத்தது. அவள் யாரோ அறியக் கூடவில்லை; குழல் இரங்கி ஒலிப்பது போல அவள் அழுகை எங்களை வருத்தியது. அது எங்கள் உள்ளத்தை வாட்டுகிறது.

‘மலை வான் கொள்க!” என, உயர் பலி தூஉய், ‘மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!’ எனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள், பெயல் கண்மாறிய உவகையர், சாரற்