பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மயிலுக்குப் போர்வை தேவை இல்லை; அது உடுத்தாது; போர்த்துக் கொள்ளாது. அது அவனுக்குத் தெரிந்ததுதான். அது தோகை விரித்து ஆட அது குளிருக்கு நடுங்குகிறது என்று தான் போர்த்திருந்த மேல் ஆடையை மயிலுக்குப் போர்த்தினான்;

கொடை மடம் பட்டான்.

கொடுப்பது அதன் அளவைப் பற்றி அவன் ஆராய்வது இல்லை; எதுவாயினும் கொடுப்பது தக்கது என்பது அவன் கொள்கை. அவன் பிறர்க்கு ஈவது மறுமையை எதிர்நோக்கியது அன்று. பிறர் வறுமையைத் தீர்க்க என்பதே அவன் கொள்கை.

பாணன் சூடிய பசும் பொன் தாமரை மாண் இழை விறலி மாலையொடு விளங்கத், கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! யாரோ? என, வினவல் ஆனாக், காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! வென் வேல் அண்ணற் காணா ஊங்கே, நின்னினும் புல்லியேம்மன்னே; இனியே, இன்னேம் ஆயினேம்மன்னே என்றும் உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, கடாஅ யானைக் கலி மான் பேகன், “எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று என, மறுமை நோக்கின்றோ அன்றே, பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே, திணை - அது; துறை - பாணாற்றுப்படை புலவராற்றுப்படையும் ஆம்.

வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

142. வையாவிக் கோப்பெரும் பேகன்

மழை, வற்றிக் கிடக்கும் குளத்தை நிரப்புகிறது; வயல்களில் பொழிகிறது; வளத்தை நல்குகிறது; அதோடு உவர் நிலத்திலும் பெய்து வீணாகிறது. அது இட பேதம் பார்ப்பது இல்லை.

பேகனும் தான் கொடுப்பதில் பேதம் பார்ப்பது இல்லை; எவருக்கு என்று எண்ணி வேறுபடுத்துவது இல்லை. கொடை மடம் படுவான். ~ ~