பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

ரா.சீ. - 16t

கொடுப்பதில் எவ்வளவு தருவது என்று எண்ணிப் பார்க்காமல் அள்ளித் தருகிறான்.

இவ்வாறு கொடுப்பது பெரியோர் தம் செயலாக உள்ளது. பெரியவர்கள் கொடைத் திறன் வியக்கத் தக்கதாக உள்ளது. அவர்கள் அளவு அறிந்து தருவது இல்லை.

தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் மடவன், மன்ற செந் நாப் புலவீர்! வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறையாக யாம் சில அரிசி வேண்டினேமாகத் தான் பிற வரிசை அறிதலின், தன்னும் தூக்கி இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் பெருங் களிறு நல்கியோனே, அன்னதுஓர் தேற்றா ஈகையும் உளதுகொல்? போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?

திணை - துறை துறை - பரிசில் விடை.

அவனை ஒளவையார் பாடியது.

141. வையாவிக் கோப்பெரும் பேகன்

எம்மைக் கண்டு ‘எவ்வூர்? எங்கிருந்து வருகிறீர்?’ என்று வியப்புடன் கேட்கின்றீர்.

எங்களின் பாணர்கள் பொற்றா மரை சூடி உள்ளனர். விறலியர் பொன்னால் ஆகிய மாலையை அணிந்துள்ளனர்.

தேரில் வந்து இறங்கிய யாம் அதன் குதிரைகளைப் பூட்டு அவிழ்த்து விட்டு இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். ‘வெளி ஊரீர் போல இருக்கின்றீர்; நீவிர் யாவிர் என்று கேட்கின்றீர். நாங்களும் ஒரு காலத்தில் உங்களைப் போலத் தான் காய்ந்து கிடந்தோம். கடும்பசியால் உழந்து வருந்தினோம்.

வேல் தாங்கிய அரசன் பேகனைக் காணா முன்பு உங்களைப் போலத்தான் வறுமையுற்று இருந்தோம்.

வள்ளல் பேகனைப் பற்றி நீங்கள் கேள்விப் படவில்லை என்று தெரிகிறது.