பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நிலம் பிளவுபடுவது போல போர் என்று ஒன்று எப்பொழுதாவது வந்துவிட்டால் உன்னைக் காணவே முடியாது; அதில் சிக்கிக் கொண்டு திரும்ப மாட்டாய். அதுவரை காத்திருக்க முடியாது. என் சுற்றத்தவர் பசித்து இருக்கிறார்கள். அதனால் இப்பொழுதே காலம் தாழ்த்தாமல் ஈக; இதுதான் யாம் வேண்டுவது.

சுவல் அழுந்தப் பல காய சில் ஒதிப் பல் இளைஞருமே, அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலியருமே. வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்; ஓடாப் பூட்கை உரவோர் மருக! உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந: மாயா உள்ளமொடு பரிசில் துன்னி, கனி பதம் பார்க்கும் காலை அன்றே: ஈதல் ஆனான், வேந்தே வேந்தற்குச் சாதல் அஞ்சாய், நீயே, ஆயிடை, இருநிலம் மிளிர்ந்திசினா அங்கு, ஒரு நாள், அருஞ் சமம் வருகுவது.ஆயின், வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே.

திணை - அது துறை - பரிசில் கடாநிலை

அவனை அவர் பாடியது.

140. நாஞ்சில் வள்ளுவன்

பலா மரம் மிக்கு உள்ள பெருநில நாஞ்சில் தலைவன் இவன் போக்கு வியத்தற்கு உரியது. புலவர்களே கொடைமடம் பட்டு அவன் செயலாற்றுகிறான்.

விறலியர் தோட்டத்தில் பறித்த கீரைக்கு யாம் உடன் உண்ணக் கறியாகச் சில அரிசிதான் கேட்டோம்.

வரிசை அறிந்து பரிசைத் தருபவன் அவன். ஒவ்வொன்றும்

ஒருமலை என்று கூறக் கூடிய அளவில் மிகப்பெரிய யானைகளைப் பரிசாகத் தருகிறான். இது மடமை அல்லவா?