பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

159


முன் நீ பரிசில் பெற்றிருக்கிறாய் என்பதால் தயக்கம் காட்டத் தேவை இல்லை. எத்தனை முறை வந்தாலும் அவன் கொடுத்துக் கொண்டே இருப்பான். இதற்குமுன் வந்தாய் என்று யாரும் பேசப் போவது இல்லை.

ஆணினம் கலித்த அதர் பல கடந்து மானினம் கலித்த மலை பின் ஒழிய, மீனினம் கலித்த துறை பல நீந்தி, உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, ‘மாறி வா என மொழியலன்மாதோ, ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், நின்னை வருதல் அறிந்தனர் யாரே?

திணை - அது துறை - பாணாற்றுப்படை அவனை மருதன் இளநாகனார் பாடியது.

139. நாஞ்சில் வள்ளுவன்

தோள் வடுப்பட இசைக் கருவிகள் பலவற்றையும் தாங்கி வரும் இள மங்கையர், மற்றும் விறலியர் ஆகிய இவர்கள் ஆடல் பாடல் வல்லவர்கள். இவர்கள் ஆடல் பாடல் இவற்றைக் கண்டு மகிழ்ந்து இவர்களுக்குச் சிறப்புச் செய்க என்று சொல்லிக் கொண்டிருக்க இது காலம் அன்று. கலைச் சிறப்புக் கண்டு விலை தருக என்று பொய் சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை.

பசி அது போக்க அதற்குப் பரிசில் கேட்க வந்துள்ளோம். இதுதான் எங்கள் நோக்கம்.

உன் உள்ளம் எப்பொழுது கனியும் என்று காத்திருக்க முடியாது. நீ போருக்குச் சென்று விட்டால் எப்பொழுது திரும்பு வாய் அதுவும் கூறமுடியாது.

பெரு வேந்தன் உனக்குப் பொருள் தந்திருக்கிறான்.

அழைப்பு வந்திருக்கிறது. இனி நீ அதை மறுக்கப் போவது இல்லை; அவனுக்காக உன் உயிரையும் தருவாய்.