பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இரங்கு முரசின், இனம்சால் யானை, முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை இன்னும் ஓர் யான் அவா அறியேனே, நீயே,முன்யான் அறியுமோனே-துவன்றிய கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, கழைக் கரும்பின் ஒலிக்குந்து, கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், கண் அன்ன மலர் பூக்குந்து, கருங் கால் வேங்கை மலரின், நாளும் பொன் அன்ன வீ சுமந்து, மணி அன்ன நீர் கடற் படரும்: செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந: சிறுவெள் அருவிப் பெருங் கல் நாடனை! நீ வாழியர், நின் தந்தை தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!

திணை - அது துறை - .. பரிசில் துறையும் ஆம். நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

138. நாஞ்சில் வள்ளுவன்

பசுக்கள் மேயும் காட்டு நிலத்தையும், மான்கள் திரியும் மலை நிலத்தையும் மீன்கள் மிக்குள்ள நீர்த்துறைகளையும் கடந்து உன் சிறிய யாழை எடுத்துக் கொண்டு பாட வந்திருக்கிறாய்.

கிழிச்சல் ஆடை, உன் கிழட்டு வயது இவை உன் துன்பத்தைக் காட்டுவன. கற்பனைகள் பல தாங்கிக் கொண்டு நீ வந்திருக்கிறாய். நாஞ்சில் வள்ளுவன் நீ கேட்டதைத் தருவான் என்று எண்ணிக் கொண்டு வந்திருக்கிறாய்.

அவன் உன்னைப் பார்த்து ‘நீ இன்று போய் மறுநாள் வருக’ என்று கூறி அனுப்பமாட்டான்.

தழைத்த கூந்தலை உடைய பேரழகி அவன் துணைவி அவளோடு மகிழ்வுடன் இருப்பவன். -

கிளி தங்கும் சோலையில் மரப் பொந்தில் சேமித்து வைக்கக்கும் கதிராகிய வைப்பீடு போல அவனிடம் கேட்ட அளவில் எளிதில் பெற முடியும்.