பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

157



நல்கினை விடுமதி, பரிசில் அல்கலும், தண் புனல் வாயில் துறையூர் முன்துறை நுண் பல மணலினும் ஏத்தி, உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

திணை - அது துறை - பரிசில் கடாநிலை. அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.

137. நாஞ்சில் வள்ளுவன்

முரசு முழங்க ஆட்சி செய்யும் மூவேந்தர்களைச் சிந்தனை யாலும் யான் எண்ணியது இல்லை; அவர்கள் புகழ் பாடிப் பெறக் கருதியது இல்லை.

பெருநில மன்னராகிய மூவேந்தர்களை யான் பாடியது இல்லை; பாடும் ஆவலும் என்மாட்டு அமைந்தது இல்லை; உன்னையே யான் முதலில் அறிந்தது; உன் நாட்டைப் பற்றித் தான் யான் பாடுவது என்பது என் கொள்கை.

உன் நாடு வளம்மிக்கது; விதைத்து விட்டால் அதற்கு மழை தேவை இல்லை. வயலில் தேங்கி உள்ள நீரே அதனை உரம் கொள்ளச் செய்யும். உன் நிலத்து நெற் பயிர் கரும்பு போல் செழித்து வளர்வது. உணவுக்கு உன் நாட்டில் எந்தக் குறையும் இல்லை.

மழைக் காலத்தில் கிழக்குக் காற்று வீசப் பெய்யும் மழை கோடையாயினும் வற்றுவது இல்லை. குவளைகள் மகளிர் கண்களைப் போல் பூத்துப் பொலிவு தருகின்றன.

கரிய அடி மரத்தை உடைய வேங்கை பொன்னிறத்துப் பூக்களைத் தருகின்றது. அவற்றைச் சுமந்து நீலமணி போல் விளங்கும் உன் நதிகள் கடலில் சேர்க்கின்றன.

உன் மலையில் உள்ள தோட்டங்கள் மலைக்கு அழகு தருகின்றன. சோலைகள் மிக்க மலைச்சாரல் உடைய நாடு நினது ஆகும்.

சிறு வெள் அருவிகள் பாயும் பெருமலையை உடைய நாடன் நீ!

உன் நாட்டைப் பாடினால் அதுவே எமக்கு மனநிறைவு தருவதாகும். உன்னையும் உன் தாயையும் தந்தையையும் வாழ்த்தி மகிழ்கின்றேன். நீவீர் வாழ்க