பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



என்பதால் உன்னை நாடிக் கடுமையான வெய்யில் காயும்

கொடுவழி கடந்து உன்னை நோக்கி வருகிறோம். உன் பெயரையும் புகழையும் ஏத்தி வருகிறோம்.

யாம் வருந்தி உழல்கிறோம். எங்களுக்குக் கொடுப்பதுதான்

அறக்கொடை மற்றவர்களுக்குத் தருவது எதிர்பார்த்துத் தருவது என்பதை எடுத்து உரைக்க விரும்புகிறேன்.

இனி f உன் விருப்பப்படி நல்குக எதைக் கொடுத்தாலும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்தி நீ தரும் ப்ொருளைக் கொண்டு உண்டு வாழ்வோம்.

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப இழை வலந்த பல் துன்னத்து இடைப் புரை பற்றிப், பிணி விடாஅ ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த பேஎன் பகை என ஒன்று என்கோ? உண்ணாமையின் ஊன் வாடித், தெண் நீரின் கண் மல்கிக், கசிவுற்ற என் பல் கிளையொடு பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? அன்ன தன்மையும் அறிந்தீயார், ‘நின்னது தா என, நிலை தளர, மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? ‘ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்’ எனக் கருதிப், பெயர் ஏத்தி, வாய் ஆர நின் இசை நம்பிச், சுடர் சுட்ட சுரத்து ஏறி, இவண் வந்த பெரு நசையேம்; ‘எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈபவென அனைத்து உரைத்தனன் யான் ஆக, நினக்கு ஒத்தது நீ நாடி,