பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

155



பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்பப், படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇப், புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, வந்தனென் எந்தை! யானே என்றும், மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு கறை அடி யானை இரியல் போக்கும் மலைகெழு நாடன் மா வேள் ஆஅய்!களிறும் அன்றே மாவும் அன்றே: ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே: பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், தமது எனத் தொடுத்தவர் ஆயின், எமது எனப் பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, அன்னஆக, நின் ஊழி; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை-வேண்டார் உறு முரண் கடந்த ஆற்றல் பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே!

திணை - அது துறை - பரிசில் துறை.

136. வேள் ஆய் அண்டிரன்

யாழுக்குப் போடும் மேல் உறை அதுபோல் உள்ளது அழுக்கேறிய என் ஆடை, அதன் கிழிச்சலை மறைக்க ஊசி கொண்டு தைக்க அதன் இடையில் உள்ள இடுக்குகளில் ஈரும் பேனும் குடி கொண்டுள்ளன; உடுத்தத் தக்க ஆடை இல்லை; இது முதற் குறை.

என் சுற்றத்தவர் உணவு இன்றி வருந்துகின்றனர். அவர்கள் விடும் கண்ணிர்; அவர்கள் பசி: இது அடுத்த தேவை.

மூன்றாவது வழிப்பறிக் கொள்ளையர் எம்மிடம் எந்தப் பொருளும் இல்லை என்று அறிவித்தும் கேளாமல் வழிப்பறி செய்ய வளைக்கின்றனர். குரங்கு போன்ற குள்ளவடிவினர் அவர்கள் தரும் தொல்லை; கைப் பொருள் யாதும் இல்லாத நிலை; இது மூன்றா வது. எம் இடுக்கண்களை நீ அறிந்தவன்