பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் கண்டீரக்கோன் ஆகலின், நன்றும் முயங்கல் ஆன்றிசின், யானே பொலந் தேர் நன்னன் மருகன் அன்றியும், நீயும் முயங்கற்கு ஒத்தனைமன்னே வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே.

திணையும் துறையும் அவை.

இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக ‘என்னை என் செயப் புல்லிராயினி? என, அவர் பாடியது.

152. வல்வில் ஓரி

யானையை வீழ்த்த அவன் எய்த அம்பு குறுக்கே வந்த புலியை வீழ்த்தியது; அது இறந்துபட்டது.

அதன் பின் அந்த அம்பு புள்ளிமான் ஒன்று துள்ளி ஒட அதனையும் கொன்றது.

அதன் பின் உரல் போன்ற தலையை உடைய பன்றியை வீழ்த்தியது. அதன் பின் அங்கே ஒரு புற்றில் தங்கி இருக்கும் உடும்பில் பாய்ந்து அங்கேயே தங்கிவிட்டது.

இது எங்களுக்கு வியப்பைத் தந்தது. ஒரே அம்பைக் கொண்டு புலி, மான், பன்றி, உடும்பு இத்தனையையும் வீழ்த்தி இருக்கிறான். இவன் திறம் மிக்க வேட்டுவன் என்று நினைத்தேன். விலைப் பொருட்டால் கொல்லும் வேடுவன் அல்லன்; கொலை செய்வது ஒரு தொழிலாகக் கொண்டவன் என்பதை அறிந்தோம். செல்வ முடையவன் போலவும் அவன் தோற்றம் தந்தான். அவன் பொன் ஆரம் அதனை மார்பில் அணிந்திருந்தான். சாரலில் அருவிபாயும் மலைநாட்டுத் தலைவன் ஒரியாக அவன் இருக்கக் கூடுமோ அல்லவோ என்ற ஐயம் எழுந்தது.

யாராக இருந்தால் என்ன பாடுவது என்று முடிவுக்கு வந்தேன். யான். ‘நான் ஒரு வண்ணம் பாடுகிறேன்; விறலி!