பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

173



அதற்கு ஏற்ப நீவிர் முழவு, யாழ், தூம்பு, எல்லரி, ஆகுளி, பதலை, இவ்விசைக் கருவிகளை இயக்குமின்’ என்று கூறினேன்.

யாவரும் தத்தம் இசைக் கருவியை இயக்க யாம் பாடினோம். இருபத்தொரு துறையையும் முற்றும் பாடினோம். பின் அவனைக் கோவே’ என்று அழைத்தோம்.

தான் யார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆதலின் அவன் சிறிது நாணம் கொண்டான்.

‘நாடுகள் பல கண்டு வருகின்றோம். உன்னைப் போல் திறன் மிக்க வேடுவனை யாம் கண்டது இல்லை’ என்று பாராட்டிப் பேசினோம்.

யாம் பாராட்டிப் பேச அவன் எங்களை விடவே இல்லை; தன் வேட்டையில் உயிர் செகுத்த மான் இறைச்சி அதனோடு பசு நெய் போன்ற தேன். இவற்றை அச்சுரத்தில் நல்கினான். அவற்றோடு தன் மலையில் கிடைத்த பொன் அதனைக் கொண்டு செய்த மணியுடன் கூடிய மாலையையும் தந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அந்தக் காட்டு வழியில் கொடுத்து உதவினான்.

அவன் கொல்லி மலைத் தலைவன் ஒரி என்பதை யாம் அறிந்து கொண்டோம்.

‘வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப், புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் கேழற் பன்றி வீழ, அயலது ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் கொலைவன் யார் கொலோ? கொலைவன் மற்று இவன் விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், சாரல் அருவிப் பய மலைக் கிழவன், ஓரிகொல்லோ? அல்லன்கொல்லோ? பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் மண் முழா அமைமின் பண் யாழ் நிறுமின்,