பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கண் விடு தும்பின் களிற்று உயிர் தொடுமின்; எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின், பதலை ஒரு கண் பையென இயக்குமின், மதலை மாக் கோல் கைவலம் தமின் என்று, இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, மூ-ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பிக், ‘கோ’ எனப் பெயரிய காலை, ஆங்கு அது தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர் என, வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, ஆன் உருக்கு அன்ன வேளியை நல்கி, தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், பல் மணிக் குவையொடும் விரைஇக், கொண்ம் எனச் சுரத்திடை நல்கியோனே- விடர்ச் சிமை ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், ஒம்பா ஈகை விறல் வெய்யோனே!

திணை - அது துறை - பரிசில் விடை

வல் வில் ஒரியை வன்பரணர் பாடியது.

153. வல் வில் ஓரி

மேகம் தவழும் மலைக்குத் தலைவன்; நாளும் இழைகள் அணிந்த யானைகளை தன்னிடம் வந்து இரப்பவருக்கு ஈயும் கொடையாளன். போர்களில் வெற்றி காணும் தலைவன். ஆதன் ஒரி அவன் மழை போலும் கொடைச்சிறப்பைக் காண்போம் என்று ஆர்வத்துடன் சென்றனர் எம் பாணர் சுற்றம்.

அவர்களுக்கு அவன் வெள்ளி நாரால் கட்டிய பொன்குவளை மாலை அதனைப் பரிசாகத் தந்தான். யானைகளையும் தந்தான். வேண்டிய பொருள் தந்து அவர்கள் பசியைப் போக்கினான். வளமான வாழ்க்கையைப் பெற்றனர்.

வேண்டிய பொருள் கிடைத்து விட்டது. பசி இல்லை. இனி இவர்கள் ஏன் பாடப் போகிறார்கள். ஆடப் போகிறார்கள். அவற்றை அவர்கள் மறந்தே விட்டார்கள். அவர்களுக்கு அத்தொழிலில் நாட்டமே இல்லாமல் போய்விட்டது.