பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், அரசர் உழையராகவும், புரை தபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர். அதனால், யானும், பெற்றது ஊதியம்; பேறு யாது? என்னேன்; உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே, ‘ஈ’ என இரத்தலோ அரிதே நீ அது நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர் எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் து விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண் பல இழிதரும் அருவி நின்

கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே.

திணை அது துறை-பரிசில் துறை.

கொண்காணங்கிழானை மோசிகீரனார் பாடியது.

155. கொண் கானம் கிழான்

வளைந்த கோட்டை உடைய சிறிய யாழை வாடிய மருங்கிலே தழுவிக் கொண்டு ‘என் பாடல் இசை கேட்டு எம் துயர் நீக்குவார் யார்?’ என்று வினவுகின்ற பாணனே! கேட்பாயாக!.

பாழ்பட்ட ஊர். அதில் நெருஞ்சி பொன்னிறத்துப் பூப் பூக்கிறது. அதற்கு ஒளி தந்து வாழ வைப்பது வானத்துக் கதிரவன்.

இல்லாது வருந்தும் பாணர்கள் அவர்கள். உணவுப் பாத் திரத்தை நிரப்ப ஒரு சூரியன் இல்லாமல் இல்லை. கொன்கானம் என்னும் பேரூரின் தலைவன் ஒருவன். இவர் தம் பசிபோக்க இருக் கிறான். அவர்கள் பாத்திரம் மலர்ச்சி பெறும்; கவலை நீங்கும். அவன்பால் செல்வீராக!

வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழிஇ, ‘உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க? எனக், கிளக்கும், பாண:- கேள், இனி-நயத்தின், பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டா அங்கு, இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்