பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

177



கொண் பெருங் கானத்துக் கிழவன்

தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே

திணை - அது துறை - பாணாற்றுப்படை

அவனை அவர் பாடியது.

156. கொண்காணம் கிழான்

பிறர் குன்றம் ஒன்றே ஒன்றில் சிறப்புப் பெற்று இருக்கும்; அது திண்மை.

கொண்கானம் என்னும் குன்றம் இரண்டு சிறப்புகளைப் பெற்று உள்ளது. மற்றவர் குன்றுகளைப் போல் அதற்கு உரிய திண்மை; மற்றொன்று புகழ்ச் சிறப்பு.

இரவலர்க்குக் கடன் கொடுத்தவர் அது திரும்பப் பெற அங்குச் சூழ்ந்திருப்பர். இது கொடைச் சிறப்பு.

மற்றும் சிறைப்பட்ட அரசரை மீட்பதற்குத் திறை கொணர்ந்து குவிப்பர். இது அவன் வெற்றிச் சிறப்பு.

இவ்விரு கூட்டம் அங்கு எப்பொழுதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். கொடை வெற்றி இவற்றால் அவன் புகழ் நிரம்பியிருக்கும். இது அதன் தனிச் சிறப்பு.

ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று: நிறை அருந் தானை வேந்தரைத் திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே.

தினை - அது துறை - இயன் மொழி.

அவனை அவா பாடியது.

157. ஏறைக்கோன்

பெருங்கல் நாடன் எம் இறை; வில்லேந்திய வீரன்; கொலைவேல் தாங்கியவன்; காந்தள் பூவை மாலையாகச் சூட்டிக்