பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கொள்ளும் குறவர்களுக்குத் தலைவன். சூரியன் அத்தமிக்கும் பொழுதில் கடமான் தன் துணையாகிய பெண்மானைக் காணாமையால் விரும்பி அழைக்கும் குரலைச் செவிமடுத்துக் கேட்கும் புலி திரிந்து வாழும் மலை அவனுடையது.

அவன் பொறுமைமிக்கவன். தம்மவர் தவறு செய்தால் அதனைத் தாங்கிக் கொள்வான்.

பிறர் துன்புறும்போது அவர்கள்பால் இரக்கம் காட்டும் கருணை உள்ளம் படைத்தவன்.

படைக்கண் நின்று போராடும் பெருiரம் படைத்தவன். புறம் கொடுத்தல் அறியாதவன். மலைநாட்டுக் குறவரின் தலைவன். -

வேந்தர்கள் கூடியுள்ள சபையில் நிமிர்ந்து நடந்து செல்லும் பேராண்மை உடையவன். இவை அவன்பால் உள்ள தனிச் சிறப்புகள். இவை நீங்கள் மதிக்கும் ஏனைய தலைவர்களிடம் காண முடியாதவை. இந்நற்செயல்களை எம் தலைவனிடம்தான் காண இயலும்.

தமர் தன் தப்பின் அது நோன்றல்லும், பிறர் கையறவு தான் நாணுதலும், படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், நூம்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், கோடற் கண்ணிக், குறவர் பெருமகன்ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, எல் படு பொழுதின், இனம் தலைமயங்கிக், கட்சி காணாக் கடமான் நல் ஏறு மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் பெருங் கல் நாடன்- எம் ஏறைக்குத் தகுமே.

திணையும் துறையும் அவை, ஏறைக்கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.