பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

179



158. குமணன்

பேரரசர் மூவருடன் எதிர்த்துப் போர் செய்த தலைவன் பறம்பு மலைத் தலைவன் பாரி; மற்றும் கொல்லி மலையை ஆண்ட ஓரி, காரி என்னும் பெயரை உடைய குதிரையை ஊர்ந்து சென்று பகைவர்களை வென்ற மலையமான், குதிரை மலைத் தலைவன் எழினியின் மகன் அதியமான், முழைகளும் சிகரங்களும் மிக்குடைய மலை நாட்டுக்குத் தலைவன் பேகன், மோசிகீரனாரால் பாடப் பெற்ற ஆய், கொடைச் சிறப்பு மிக்க நள்ளி என இவ் ஏழு வள்ளல்கள் மாய்ந்த பிறகு இரப்போர் வறுமை தீர்க்கும் வள்ளல் நீ எனப் பாணரும் பிறரும் கூடி வரின் அவர்தம் துன்பம் தீர்க்கிறாய் என்று யான் கேள்வியுற்று அவர்களோடு உன்னை நாடி வந்துள்ளேன். பலாக்கனியைப் பறித்து வைத்துக் கொண்டு தன் துணை மந்தியை அழைக்கும் கடுவன் உள்ள முதிர மலைத் தலைவனே! நீ இசை மேம்பட வள்ளன்மையுடன் விளங்குக! நீ வெற்றிகள் பெறுக.

முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், அரசுடன் பொருத அண்ணல் நெடு வரைக், கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல் வில் ஒரியும்; காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, மாரி ஈகை, மறப் போர் மலையனும்: ஊராது ஏந்திய குதிரைக், கூர் வேல், கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, அருந் திறன் கடவுள் காக்கும் உயர் சிமைப், பெருங் கல் நாடன் பேகனும், திருந்து மொழி மோசி பாடிய ஆயும், ஆர்வம் உற்று உள்ளி வருநர் உலைவு நனி தீரத், தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் - என ஆங்கு எழுவர் மாய்ந்த பின்றை, “அழிவரப் பாடி வருநரும் பிறரும் கூடி