பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இரந்தோர் அற்றம் தீர்க்கு என, விரைந்து, இவண் உள்ளி வந்தனென், யானே விசும்புறக் கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி. ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, முட் புற முது கனி பெற்ற கடுவன் துய்த் தலை மந்தியைக் கையிடுஉப் பயிரும், அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! இசை மேந்தோன்றிய வண்மையொடு, பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!

திணை - அது துறை - வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம். குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

159. குமணன்

நரை மூதாட்டி, முதுமைமிக்கவள் என் தாய்; அவள், “என் உயிர் என்னை விட்டுப் போகவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டுமோ என்று கவலைப்பட்டவளாய்க் கோலைக் காலாகக் கொண்டு குறுகிக் குறுகி நடந்து முற்றத்தை விட்டுச் சற்றும் போகாதவள்; நூல் விரித்தது போன்ற நரை முடியினள்; அவள் வாட்டம் ஒரு புறம்.

என் மனைவியைக் குழந்தைகள் பிய்த்துத் தின்கின்றன. பால் பெறாமையால் பிசைந்து தின்ன வாடிய முலையள்; பசந்த மேனியள். குப்பையில் கீரையை அது முளைக்கும் தோறும் பறித்துக் கொண்டு வந்து உப்புப் போடாமல் நீர் உலையாக ஏற்றி மோர் இல்லாமல் வேக வைத்த சோறு அதுவும் சில சமயம் கிடைக்காமல் கீரையை மட்டும் தின்று வருகிறாள். அழுக்குப் படிந்த உடை, அதுவும் கிழிச்சல். பசியால் வாடி வருந்துகிறாள்; மனம் நொந்து அறத்தைப் பழித்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறாள்; செயலற்றுக் கிடக்கிறாள்.

முதிர்ந்த என் தாயும், வருந்திக் கிடக்கும் என் மனைவியும் மகி ழும்படி நீ பெரிய யானையைத் தருகிறாய். வாடிக் கிடக்கும் தினைக் கதிர்க்கு அது தழைக்கப் பெரு மழை பொழிவது போல் அது அமையும்.