பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



குகைகளில் எதிர் ஒலிக்கும். அதனோடு கூகையின் குரல் ஒலியும் சேர்ந்து இரட்டிக்கும்.

இத்தகைய மலை நாட்டுக்குத் தலைவன் கொற்றன்; பரிசிலர்க்கு எளியன்; எதிர்க்கும் பகைவர்க்கு அரியன்; விறலியர்க்கு யானைத் தந்தத்தில் விளையும் முத்துக்களைத் தருவான். கள்ளாகிய தேறலைப் பாணர்க்கு நல்குவான்; அவர்க்கு அவன் மெல்லியன்.

கொல்லன் உலைக் களத்தில் அடுத்த உலைக்கல் போன்று அவனை எதிர்க்க வரும் பகைவர்க்கு வன்மையன். அதனால் பகைவர்களே! அவனை நெருங்காதீர்.

மரை பிரித்து உண்ட நெல்லி வேலிப், பரலுடை முன்றில், அம் குடிச் சீறுர், எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே சிறு கண் யானை வெண் கோடு பயந்த ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, நார் பிழிக் கொண்ட வெங் கட் தேறல் பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் விசைத்து எறி கூடமொடு பொரூஉம் உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.

திணை - வாகை துறை - வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.

அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

171. பிட்டங் கொற்றன்

இன்று சென்று கேட்டாலும் தருவான்; சில நாள் கழித்துச் சென்றாலும் மறுக்காமல் தருவான்.