பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

193



169. பிட்டங் கொற்றன்

போர் மேற் செல்லுங்கால் படைகளுக்கு முன் நிற்கிறாய்.

அதே போல வருபடைகளையும் ஆற்றிடை விளங்கும் குன்று போல் முன் நின்று தடுக்கிறாய்.

பகைவர் தாக்குதலுக்கு நீ எப்பொழுதும் புறங் கொடுத்தது இல்லை. இளங்கோசர்கள் சிறுவர்கள் படைப் பயிற்சி பெற எய்யும் அம்புகளைத் தாங்கும் முருக்க மரத்தால் ஆகிய கம்பம் போல் பொருநர்க்குத் தோற்காது தாக்குப் பிடித்துப் போரில் நின்று போராடுகிறாய்.

போரையே உன் தொழிலாகக் கொண்டு விளங்கும் தலைவன் நீ!

ஒன்று கூற விரும்புகிறேன். நீ போர் முடித்துத் திரும்பும் வரை எங்கள் வறுமை எங்களை வாழ விடாது. எம் சுற்றத்தினர் வறுமைத் துன்பம் போக்க இப்பொழுதே கொடுத்து அனுப்புக. இதுவே யாம் வேண்டுவது.

நும் படை செல்லும்காலை, அவர் படை எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, அவர் படை வரூஉம்காலை, நும் படைக் கூழை தாங்கிய, அகல் யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாது, அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; பெரிதால்அத்தை, என் கடும்பினது இடும்பை, இன்னே விடுமதி பரிசில் வென் வேல் இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெரு மரக் கம்பம் போலப், பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே!

திணை - அது துறை - பரிசில் கடா நிலை.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

170. பிட்டங் கொற்றன்

அவன் சிற்றுரில் வில் தொழிலாளர் இடையே துடிப்பறை அடிப்பவர் உண்டாக்கும் பேர் ஒலி புலி தூங்கும் மலைக்