பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கிழங்கு கிளர உழப்பட்ட நிலத்தில் காலம் அறிந்து வித்திட்டு அறுத்த தினை அதனை மரைஆன் தருகிற பாலொடு சேர்த்து அவற்றோடு மான் இறைச்சியும் இட்டு வேக வைத்துச் சோறு சமைக்கின்றனர். அதனை வாழை இலையில் இட்டுப் பலரும் பகுத்து உண்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்க குதிரை மலைக்குத் தலைவன் நீ.

நறைக் கொடி நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூவைத் தலையில் சூடிக் கொள்ளும் வடித்த அம்புகளை உடைய வில் வீரர்களுக்குத் தலைவன்; நீ ஈகையில் சிறந்தவனாகவும் உள்ளாய்.

தமிழகம் முழுவதும் உன் புகழ் பரப்பப் புலவர் பாடிச் சிறப்பிப்பர் என்று இரவலர் பலரும் கூறுகின்றனர். ஈயாதவர் களுக்கு இப் புகழ் வாய்ப்பது இல்லை. அவர்கள் நாணத்தக்கவர்.

அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தட் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு, கடுங் கண் கேழல் உழுத பூழி, நல் நாள் வரு பதம் நோக்கிக், குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறு தினை முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார், மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றிச், சாந்த விறகின் உவித்த புன்கம் கூதளம் கவினிய குளவி முன்றில், செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ” கூர்வேல், நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! வையக வரைப்பில் தமிழகம் கேட்பப், பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் பாடுப என்ப பரிசிலர், நாளும்ஈயா மனனா நாண, வியாது பரந்த நின் வசை இல் வான் புகழே. திணை - பாடாண் திணை, பரிசில் துறை இயன்மொழியும், அரச வாகையும் ஆம் பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.