பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

191


தர வில்லை; போரில் நீ பெறும் வெற்றிகள் அவை நினைக்குப் புகழைச் சேர்க்கின்றன. அவற்றைக் கேட்கச் செவிக்கு இனிமை தருகின்றன.

கண்ணுக்கு நீ இனியை அல்லை; செவிக்கு நீ இனியனாக விளங்குகிறாய்.

உன்னோடு எதிர்த்தவர் எதிர்க்க முடியாமல் புறங்கொடுத்து உயிர் தப்புகின்றனர். ஊறு ஏதும் இல்லாமல் ஊர் திரும்புகின்றனர். வடுப்படாத யாக்கை அதனால் கண்ணுக்கு இனியராகின்றனர். செவிக்கு இன்னாதவர் ஆகின்றனர்.

நீவிர் இருவரும் ஒன்றில் இனியராகவும் மற்றொன்றில் இன்னாதவராக வும் ஆகின்றீர். இவ்வகையில் உங்கள் இருவருக்கும் ஒற்றுமை நிலவுகிறது.

வீரம் மிக்க கிள்ளி வளவ! உன்னை இவ்வுலகம் வியந்து பாராட்டுகிறது. இதற்குக் காரணம் யாது? எமக்கு உரைத்தருள்க!

நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, கேள்விக்கு இனியை, கட்கு இன்னாயே: அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், ஊறு அறியா மெய் யாக்கையொடு, கண்ணுக்கு இனியர், செவிக்கு இன்னாரே! அதனால், நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி: நின்னை வியக்கும் இவ் உலகம், அஃது என்னோ? பெரும உரைத்திசின் எமக்கே.

திணை - அது துறை - அரச வாகை ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

168. பிட்டங் கொற்றன்

மிளகுக் கொடி வளரும் மலைச் சாரலில் காந்தள் கிழங்கு அதனைத் தோண்டி எடுக்கக் கேழல் பன்றி நிலத்தை உழுகிறது.