பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மெய் அன்ன பொய் உணர்ந்து, பொய் ஓராது மெய் கொளிஇ, மூஏழ் துறையும் முட்டு இன்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக! வினைக்கு வேண்டி நீ பூண்ட புலப் புல்வாய்க் கலைப் பச்சை சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய, மறம் கடிந்த அருங் கற்பின், அறம் புகழ்ந்த வலை சூடிச், சிறு நுதல், பேர் அகல் அல்குல், சில சொல்லின், பல கூந்தல் நின் நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் தமக்கு அமைந்த தொழில் கேட்பக் காடு என்றா நாடு என்று ஆங்கு ஈர்-ஏழின் இடம் முட்டாது, நீர் நாண நெய் வழங்கியும், எண் நாணப் பல வேட்டும், மண் நாணப் புகழ் பரப்பியும், அருங் கடிப் பெருங் காலை, விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை, என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின், பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும் - தண் புனற் படப்பை எம் ஊர் ஆங்கண், உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம், செல்வல்அத்தை, யானே, செல்லாது, மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக் கழை வளர் இமயம் போல,

நிலீஇயர் அத்தை, நீ நிலம்மிசையானே.

திணை - வாகை துறை - பார்ப்பன வாகை.

சோணாட்டுப் பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

167. ஏனாதி திருக்கிள்ளி

களம் பல காண்கிறாய்; அதனால் வடுப் பெற்ற யாக்கை உனது. வடுப்பட்ட யாக்கை அதனால் உன்னைக் காண நீ இனிமை