பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

189



ஆடு மலி உவகையொடு வருவல்,

ஓ டாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே

திணை - அது துறை - பரிசில் விடை.

தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு. அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து, இளங் குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

166. கெளனியன் விண்ணந்தாயன்

சடை முடி தரித்த இறைவன் அவன் விரித்து உரைத்த வேதங்கள் நான்கனுக்கும், வேத அங்கங்கள் ஆறனுக்கும் எதிராகப் பேசி வாதிட்ட மாற்றுச் சமயத்தவரை மறுத்து வாகாடி உண்மை உணரச் செய்த உரவோர்கள் தும் முன்னோர்கள். அவர் இருபத்தொரு துறைகள் முற்றிய யாகங்களைச் செய்தவர்கள்.

அவர்கள் வழியில் வந்த நீ மான் தோலைப் பூணுரல் மேலிட்டு அமர்ந்து வேள்விகளைச் செய்து முடித்தாய். உன் துணைவியர் நீ இட்ட ஏவல்களைச் செய்து இவ்வேள்விகளை

நிறைவு செய்தனர்.

நீர் நாண நெய் வழங்கப்பட்டது. எண்ண முடியாத வேள்வி கள் பல இயற்றினர்; உலகம் வியக்க உன் புகழ் எங்கும் பாவியது.

இந்த விழாவின் இறுதியில் நீ நடத்திய விருந்துகள் பல அவற்றில் யாமும் பங்கு கொண்டோம். இவ்விருத்துகள் தொடர்ந்து நடைபெறுவதாக வேண்டியவற்றை யாம் பரிசிலாகவும் பெற்றுக் கொண்டோம்.

இனி எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. எங்கள் சொந்த ஊராகிய காவரி பாயும் எம் ஊர்க்குச் சென்று நின் புகழ் பாடி உண்டும் தின்றும் மகிழ்வு கொண்டாடுவோம். நீ இமயத்தைப் போல நிலமிசை நீடு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.

நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் வாய் போகாது. ஒன்று புரிந்த ஈர்-இரண்டின், ஆறு உணர்ந்த ஒரு முது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார்,