பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


165. இளங்குமணன்

நிலையில்லாத இவ்வுலகில் புகழை நிறுத்தி விட்டு மாள்பவரும் உளர்.

கிடைத்தற்கு அரிய செல்வம் படைத்தவர்களும் வறுமையால் இரக்கின்றவர்க்கு ஈயாமல் வாழ்கின்றனர். அவர்கள் அவர்தம் பெயரை நிலை நாட்டுவது இல்லை. அவர்கள் உலகத்தவரால் மறக்கப்படுகின்றனர்.

யானைகள் பலவற்றைப் பரிசிலர்க்கு நல்கிய புகழ்மிக்க தலைவன் குமணனைச் சென்று பார்த்தேன். குமணன் உன் தமையன், அவன் நாட்டை உன்னிடம் ஒப்புவித்து விட்டு நீ வாழ வேண்டும் என்பதற்காகக் காட்டில் உறைகிறான். நாடு இழந்ததை விடப் பாடும் புலவனுக்கு ஈயாத நிலை மிகவும் கொடியது; இழிந்தது என்று தன் வாளைத் தந்து தன் தலையை அறுத்து எடுத்துக் கொண்டு அதனை உன்பால் சேர்க்க என்று கூறி அனுப்பி யுள்ளான். தன்னைவிடச் சிறந்த பொருள் கொடுக்க அவனிடம் இல்லாமையால் வாளைத் தந்தான்.

மிக்க மகிழ்வோடு இதனைப் பெற்றுக் கொண்டு உன்பால் வந்துள்ளேன். இனி நீ விரும்பியது செய்க. இவ்வாளினை நீ

காண்பாயாக!

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே, துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே! தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் பாடி நின்றனெனாகக் கொன்னே பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது என, வாள் தந்தனனே, தலை எனக்கு ஈயத், தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்,