பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

187



164. குமணன்

அடுப்புப் பற்ற வைப்பதையே விட்டு விட்டாள் என் மனைவி. சாம்பலே இல்லாத வெற்று அடுப்பு அது. அதில் காளான் பூத்துக் கிடக்கிறது.

குழந்தை பசியால் தாய் முலை பற்றிக் குடிக்க முயல்கிறது. பால் இன்மையால் துளை தூர்ந்துவிட்டது. அதைச் சுவைத்துச் சுவைத்துப் பால் இல்லாமையால் அது அழுகிறது.

அழும் அந்தக் குழந்தையின் முகத்தைத் தாய் பார்க்கிறாள். அவள் கண்களில் நீர் நிறைகிறது. அது தேங்கி இருக்கும் அவள் அவலத்தை யான் பார்க்கிறேன். அவள் துன்பம் எம் துன்பம் ஆகியவற்றை நீக்கத் தக்கவன் நீதான் என்று முடிவு செய்தேன். உன்னை நோக்கி வந்துள்ளேன். யாழையும், முழவையும் உடைய கூத்தர்களின் வறுமையைப் போக்கும் உயர் குடியில் பிறந்தவன் நீ. உன்னை விட்டு விலகாமல் வலியச் சூழ்ந்து நிற்பேன். பரிசு தந்தால்தான் அகல்வேன். இது என் இப்பொழுதைய நிலை; குழந்தை தாய்முகம் நோக்குகிறது; அவள் என்னை எதிர்பார்க் கிறாள். நான் உன்னை எதிர்பார்த்து வந்துள்ளேன். பொருளைப் பெற்றுதான் போவேன். வேறு வழியே இல்லை. ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் ஆம்பி பூப்பத், தேம்பு பசி உழவாப், பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை சுவைத் தொறு அழுஉம் தன் மகத்து முகம் நோக்கி, நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் மனையோள் எவ்வம் நோக்கி, நினை.இ, நிற் படர்ந்திசினே- நல் போர்க் குமண!என் நிலை அறிந்தனை.ஆயின், இந் நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், மண் அமை முழவின், வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

திணை-அது துறை - பரிசில் கடாநிலை. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.