பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இரவலர் புரவலை நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்: இரவலர் உண்மையும் காண், இனி, இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடு நல் யானை எம் பரிசில்: கடுமான் தோன்றல் செல்வல் யானே.

திணை - அது துறை - பரிசில் விடை

அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் பரிசில் கொடு என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய்க், குமணனைப் பாடிக், குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று. வெளிமான் ஊர்க் கடிமரத்துயாத்துச் சென்று, அவர் சொல்லியது.

163. குமணன்

உன்னை விரும்புவோர்க்கும் அதேபோல நீ விரும்பி நேசிப்பவர்க்கும், உன் சுற்றத்தவர்க்கும், உன் வறுமைக் காலத்தில் உனக்குக் கடன் தந்து உதவியவர்க்கும், மற்றும் இன்ன தன்மையர் என்று பார்க்காமல் என்னோடும் கலந்து ஆராயாமல் பொருளை வைத்துக் கொண்டு நாமே சிறப்பாக வாழலாம் என்று கருதாமல் எல்லோர்க்கும் கொடுப்பாயாக. பிறரிடத்தில் நீ பெற்றதுபோல நீயும் பிறர்க்குத் தந்து உதவுவாயாக. -

பழமுதிர் சோலைகள் உடைய முதிர மலைக்குத் தலைவன் குமணன் நல்கிய செல்வம் இது. மனைக்கிழத்தியே பலருக்கும் தந்து மகிழ்வோடு வாழ்வாயாக.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும், கடும்பின் கடும் பசி தீர யாழ நின் நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும், இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி-மனை கிழவோயே!பழம் தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேல் குமணன்'நல்கிய வளனே.

திணை - அது துறை - பரிசில்.

பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.