பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

8

5

ரா.சீ.

இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர எனக் கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் தாள் படு செல்வம் காண்தொறும் மருளப், பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, செலல் நசைஇ, உற்றனென். விறல் மிகு குருசில்! இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! வல்லினும், வல்லேன்.ஆயினும், வல்லே, என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் பல் பொறிக் கொண்ட எந்து எழில் அகலம் மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, வாள் அமர் உழந்த நின் தானையும், சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.

திணை - அது துறை - பரிசில் துறை. அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.

162. இளவெளி மான்

இரப்பவர்க்குத் தரக் ககும் கொடையாளி நீ ஒருவன் மட்டும் இருக்க வில்லை. வேறு கொடையாளிகளே இல்லை என்று கருத வேண்டாம்.

உலகத்தில் இரவலர்களும் உளர்; அவர்களுக்குச் சிறப்புச் செய்யும் புரவலர்களும் உளர். இதனைக் காண்பாயாக!

நின் ஊரின் கண் காவல் மரத்தில் யாம் கட்டி வைத்துள்ள நெடிய யானை யாம் கொண்டு வந்துள்ள பரிசில் ஆகும். அதனை நீயே வைத்துக் கொள். யான் சென்று வருகிறேன். நீ சிறப்பாக வாழ்க.