பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வழிப்பறி கொள்ளையர் மிக்கு உள்ளனர்; உயிர்மேல் பற்று இல்லாமல் உழந்து திரிவன கலைமான்கள்; இந்தக் கடுமையான வழிகளைக் கடந்து சென்றவர் ஒர் ஆண்டு ஆகியும் திரும்ப வில்லையே என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறாள் என் துணைவி.

அவள் மருட்சி அடைய யான் பெரிய யானையில் ஏறிச் செம்மாந்து செல்ல வேண்டும் என்பதே என் விழைவு.

வறுமை என்னை வாட்ட அது என்னைத் தூண்ட யான் உன்பால் வந்துள்ளேன். நின் கொடையை எதிர்பார்த்து வந்துள்ளேன். யான் கூறுவதைச் செவிமடுப்பாயாக.

எனக்குத் திறமை உள்ளதா இல்லையா என்பது பெரிது அன்று. என்னை வைத்து நீ முடிவு செய்யாதே. உன் பெருமைக்கு ஏற்ப நீ மகிழ்ந்து அளிப்பாயாக.

பெரு நிலவேந்தர்களும் எம் நிலை கண்டு அவர்கள் வெட்கப் பட வேண்டும். சீரும் சிறப்பும் மிக்க பரிசில் தந்து சிறப்புச் செய்க.

சாந்து பூசப்பட்ட நின் அழகிய மார்பினை உன் காதல் துணைவியர் தழுவ நீ மகிழ்வு பெறுவாய்.

நின்தாள் நிழல் வாழ்வோர் கொடைப் பொருள் பெற்று உயர்வர். வாள் ஏந்திப் போர் செய்யச் செல்லும் உன் படையையும் உன் சீர்மிகு செல்வத்தையும் ஏத்தி யாம் புகழ்வோம்.

நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழிஇப், பெரு மலை அன்ன தோன்றல, சூழ் முதிர்பு, உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, வள மழை மாறிய என்றுழ்க் காலை, மன்பதை எல்லாம் சென்று உணக், கங்கைக் கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின், ‘அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவரச் சென்று தலை வருந அல்ல, அன்பு இன்று, வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு,