பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


172. பிட்டங் கொற்றன்

எந்தத் தயக்கமும் வேண்டாம்; உலை ஏற்றுக; சோறு ஆக்குக; கள்ளுக்கு இனி எந்தக் குறையும் இருக்காது; விறலியர் பூச்சூடி மகிழ்வு பெறுவாராக. இதைப் போல் இன்னும் மகிழ்வுகள் பெறுவாராக.

ஐவனம் காக்கும் காவலர் சுடு தீ ஒளி குறையுமானால் ஒளியுடையை மணிகள் இருளை அகற்றும் மலை நாட்டவன் பிட்டன். அவன் போரில் வெற்றி பெறக் காரணம் ஆகிய வேலும், அவனைப் படைத் தலைவனாக ஏற்கும் அரசனும், ஈகை மிக்கவனும் ஆகிய சேரமான் கோதை என்பானும், அவனோடு மாறுபட்டுப் போர் செய்ய எதிர் நிற்கும் மன்னர்களும் நெடிது காலம் வாழ்வாராக போர்கள் மிகுந்தால்தான் அவனுக்கு வெற்றிகள் வந்து குவியும். பரிசிலர்க்கும் வாழ்வு கிடைக்கும்; வேண்டுவன தருவான்.

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே, கள்ளும் குறைபடல் ஒம்புக ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பிறவும் செய்க என்னது உம் பரியல் வேண்டா வரு பதம் நாடி, ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் வன் புல நாடன், வய மான் பிட்டன் ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை மா வள் ஈகைக் கோதையும், மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே’

திணையும் துறையும் அவை,

அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

173. சிறுகுடி கிழான் பண்ணன்

என் வாழ்நாளும் பெற்றுப் பண்ணன் நெடுங்காலம் வாழ்வானாக! பாணர் தோழர்களே! பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம் அண்மையில் உள்ளதா சேய்மையில் உள்ளதா அறிவியுங்கள்.