பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

197



இதோ என்பாண்சுற்றத்தினர் வறுமைத்துன்பமும், அவர்கள் பசித்து இருப்பதும் காண்பீராக!

புதிதாகப் பழுத்துக் கிடக்கும் மரங்களை நோக்கிப் பறவைகள் வந்து மொய்ப்பது போல உணவு பெற்றுத் திரும்பு வாரின் மகிழ்வு ஆரவாரம் கேட்கிறது.

மற்றும் மழை வரப் போவதை முன்னரே அறிந்து முட்டை யைத் தாங்கிக் கொண்டு மேடான நிலத்தில் சேர்த்து வைக்கச் செல்லும் சிற்றெறும்புகள் வரிசையைப் போல் பாணர் சிறுவர்கள் சோற்றுத் திரளைக் கையில் ஏந்திக் கொண்டு செல்கின்றனர்.

அதனால் பண்ணன் இல்லம் இங்குதான் எங்கோ உள்ளது என்பது தெரிகிறது. பசிப்பிணி மருத்துவன் ஆகிய பண்ணணின் இல்லம் எங்கே உள்ளது; அணித்தோ சேய்த்தோ அது மட்டும் அறிவிக்கவும்.

யான் வாழும் வாழ்நாள் அதுவும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக!

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை, யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே

திணையும் துறையும் அவை, சிறுகுடிகிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.