பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


174. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்

அசுரர்கள் சூரியனை மறைத்துவிட உலகம் இருள் பட்டு விட்டது; அஞ்சன வண்ணனாகிய திருமால் அதனை மீட்டுக் கொணர்ந்து உலக இருளைப் போக்கினான்.

அதுபோலச் சோழ நாட்டு மன்னன் போரில் புறங்கொடுத்து உயிருக்கு அஞ்சி முள்ளுரில் மறைந்து இருந்தான். பகைவர்களை ஒடச் செய்து அவனைத் தேடிப் பிடித்து மீண்டும் சோழ நாட்டுக்குத் தலைமை ஏற்கச் செய்து அந்நாட்டுக்கு ஒளி தந்தாய்.

அத்தகைய சிறப்புடைய நீ இப்பொழுது உன் முன்னவர் ஆகிய உன் தந்தை இறந்துபடக் கபிலன் பாடிச் சிறப்பித்த உன் முள்ளுர் தக்க தலைவன் இல்லாமல் தவிப்பு எய்தி உள்ளது. கோடைக் காலத்துப் பெருமழை போல அம் மக்களுக்கு நீ தலைவனாக விளங்குகிறாய். அரசு ஏற்று அவர்களுக்கு ஒளி தருகிறாய்.

சோழனை நீ அரசு பதவியில் நிறுத்தினாய். அதுபோல நீயும் தலைமைப் பதவி ஏற்று மக்களுக்கு ஒளி விளக்காகத் திகழ்கிறாய்; கோடை மழையாக விளங்குகிறாய்.

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தெனச் சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பை கொள் பருவரல் தீரக் கடுந் திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, அரசு இழந்திருந்த அல்லற்காலை, முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி மல்லல் நல் நாட்டு அல்லல் தீரப், பொய்யா நாவின் கபிலன் பாடிய, மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட எள் அறு சிறப்பின் முள்ளுர் மீமிசை, அரு வழி இருந்த பெரு விறல் வளவன்