பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

199



மதி மருள் வெண்குடை காட்டி, அக்குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந: விடர்ப் புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண், சுரும்பு ஆர் கண்ணிப், பெரும் பெயர் நும் முன் ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலம் தீர, நீ தோன்றினையே-நிரைத் தார் அண்ணல்! கல் கண் பொடியக், கானம் வெம்ப,

மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்கக் கோடை நீடிய பைது அறு காலை, இரு நிலம் நெளிய ஈண்டி, உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே

திணை - வாகை துறை - அரச வாகை,

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார்

பாடியது.

175. ஆதனுங்கன்

ஆதனுங்கனே! என் தலைவனே! என் நெஞ்சத்தைத் திறந்து காண்பவர் உன்னை அங்குக் காண்பர்.

என் நினைவுகள் எல்லாம் உன்னைச் சுற்றியே இயங்கு கின்றன.

உன் புகழைத்தான் என் நா பேசுகிறது.

உயிருள்ளவரை யான் உன்னை மறக்க முடியாது; இறுதி மூச்சு உள்ளவரை உன் நினைவாகவே இருந்து வாழ்வேன். இதுதான் என் நிலை.

அதற்குக் காரணம் நீ வாழும் இடம் மோரியர் ஆட்சி இடம் பெற்ற உலக இடைகழியில் நிலைபெற்றுள்ள ஆதித்த மண்டலம் போல அறம் நிரம்பிய இடம்; அறவழி உன் வழி; பலருக்கு உதவி அருளுகிறாய்; அதனால்தான் உன்னை மதிக்கிறேன்; போற்று கிறேன்; உன் நினைவாகவே வாழ்கிறேன்.