பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வீரன் அவன் விடும் அம்பு எங்கெங்கோ பாய்கிறது என்று கூறுவது அவன் செயலாற்றலை எடுத்து உரைக்கிறது. வில்லாற்ற லைத் தன் சொல்லாற்றலால் கவிஞர் புலப்படுத்துகிறார்.

மற்றும் ஒரு செய்தி

யானையை எறிந்துவிட்டான்; அதனால் முறிந்தது அவன் கைவேல். அதன் மழுங்கலை நிமிர்த்திக் கொள்கிறான். விழுந்து பட்ட யானையின் மருப்பைக் கொண்டு அதில் பொருத்தி நிமிர்த்துகிறான். அவ் வேலினை மீண்டும் கையில் ஏந்துகிறான். பகைவர் அஞ்சி நடுங்குகின்றனர். அதனைக் கண்டு நகைக்கிறான் வீரன்.

“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்” - குறள் 774

இதே கருத்தை இப் புறப்பாடல் கூறுகிறது.

“வருகதில் வல்லே; வருகதில் வல்’ என,

வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப, நூலரி மாலை சூடிக், காலின், தமியன் வந்த மூதிலாளன் அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தாத், தனக்கு இரிந்தானைப் பெயர்புறம் நகுமே” -284 அஞ்சிப் பெயர்கிறவனைக் கண்டு இவன் சிரித்து நகைக்கிறான் என்கிறார். நகும் என்பதை வள்ளுவரும் கூறக் காண்கிறோம். செய்தி ஒன்றாக இருக்கிறது.

சீரிய கருத்துகள்

திருக்குறளைப் போல உயரிய கருத்துகளைத் தருவதில் புறநானூறு தலைசிறந்து விளங்குகிறது.

தனக்கென வாழாத தகைமையோர்

‘அமுதமேயாயினும் அதனைப் பிறர்க்கும் ஈந்து உண்பதில் மகிழ்வு கொள்வர்.