பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ. 21

புகழ் என்றால் உயிரையும் தருவர்; இகழ் என்றால் உலகமே கிடைப்பதாயினும் உதறித் தள்ளுவர்.

தனக்கு என்று வாழாத செம்மை உடையவர். பிறர்க்கு என வாழும் உயர்ந்தவர்கள் இவர்கள்.

இவர்கள் ஒரு சிலர் உலகில் இருப்பதால்தான் நன்னெறிகள் நிலைக்கின்றன; உயர்வுகள் தழைக்கின்றன; உலகம் வாழத் தகுதியாக உள்ளது" என்று கூறுகிறார்.

"உண்டால்அம்ம, இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின், உயிருங்கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே" - 182

நாடு எது?

நாடு என்பது யாது? மேடு பள்ளங்கள் கொண்ட நிலப்பரப்பு அன்று; மக்கள் வாழ்வியலை ஒட்டியே நாடு மதிக்கப்படுகிறது. அவல் (பள்ளம்) மிசை (மேடு) அவற்றை ஒட்டி அது நாடு என்று கூறப்படுவது இல்லை. நாடோ காடோ அதனை ஒட்டிச் சிறப்புகள் அமைவதில்லை. மக்கள் அவர்களை ஒட்டித்தான் மிக்க சிறப்புகள் உள்ளன என்ற கருத்து போற்றத்தக்கது.

"நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நிலனே!" - 187

சான்றோர்கள் அவர்கள் சிறப்பு

கவலையற்று வாழ்வதற்கு வீடும் நாடும் சீர்மை உடையதாகஇருக்க வேண்டும். அதைவிடச் சான்றோர்கள் இருந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறுகிறது. கவலை நீங்கி வாழ அவர்கள்